திருச்சி, மார்ச் 23: திருச்சியில் நாடாளுமன்ற தேர்தல் நாளன்று மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவதற்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள் பார்வை மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் பலவீனமான இயக்கம் கொண்ட வாக்காளர்கள் தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு அவர்களது இருப்பிடத்தில் இருந்து வாக்குசாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் நாளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என்றால், அவா்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும், இறக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள வாக்காளா்கள் இந்த வசதிகளைப் பெறுவதற்கு ஏதுவாக இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக்க்ஷம் இசிஐ ஆப் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள வாக்காளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
The post தேர்தல் நாளன்று வாக்களிக்க மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் appeared first on Dinakaran.