×

ஆந்திராவிலிருந்து மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

 

திருவள்ளூர், மார்ச் 23: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து அரசு அனுமதி இன்றி மணலை கடத்தி வருவதாக மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் வெங்கல் போலீசார் போலீசார் வெங்கல் பஜார் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரி ஒன்றை மடக்கினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றதால் டிஎஸ்பி மற்றும் போலீசார் விரட்டிச்சென்று தாமைப்பாக்கம் அருகே மடக்கி பிடித்தனர். அப்போது லாரியை சோதனை செய்தபோது மணலை லாரி முழுவதும் நிரப்பிவிட்டு அது தெரியாமல் இருப்பதற்காக ஜல்லி கற்களை நிரப்பி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து உங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மணல் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பழனிகுமார்(37) என தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவிலிருந்து மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Thiruvallur ,District Collector ,T. Prabhushankar ,District ,SP ,Srinivasa Perumal ,Uthukottai, Thiruvallur district.… ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்