×

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் அறையினை சப் கலெக்டர் நேரில் ஆய்வு

 

பொன்னேரி, மார்ச் 23: பொன்னேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை வைப்பதற்கான அறையினை சப் கலெக்டர் சாஹே சன்கேத் பல்வந்த் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் வாக்குப்பெட்டிகளை வைப்பதற்கான அறைகளை பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரியில் பொன்னேரி சப் கலெக்டர் சாஹே சன்கேத் பல்வந்த் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்பு, அந்த இடத்தில் எவ்வாறு வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பது, இதனை கண்காணிப்பதற்கு சிசிடிவி கேமராக்களை எங்கு பொருத்துவது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வஸ்த், பொன்னேரி தாசில்தார் மதிவாணன், துணை தாசில்தார் சீனிவாசன், பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் அறையினை சப் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sub-Collector ,Ponneri ,Sahe Sanketh Balwant ,Tiruvallur district ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்