×

பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

திம்பு: இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது. பூடான் பிரதமர் டோப்கே 5 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்து சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று காலை பூடான் சென்றார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று காலை பிரதமர் மோடி விமானத்தில் புறப்பட்டார். இதனை தொடர்ந்து பூடானில் உள்ள பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே வரவேற்றார்.

இதனை தொடர்ந்து நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ரக் கயால்போ’வை மன்னர் ஜிக்மே கேசர் வழங்கி கவுரவித்தார். இந்தியா-பூடான் இடையேயான உறவுகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி செய்த சிறந்த பங்களிப்பு மற்றும் பூடான் மக்களுக்கு அவர் செய்த சிறப்பான சேவையை பாராட்டி பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுக்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

The post பிரதமர் மோடிக்கு பூடானின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Bhutan ,PRIME MINISTER DOBKE ,INDIA ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...