×

ரெய்டு நடத்தி கைது செய்யப்பட்டதும் பாஜவுக்கு ₹40 கோடி நிதி தந்து அப்ரூவராக மாறிய தொழிலதிபர்: கெஜ்ரிவால் கைதுக்கு அவரது சாட்சியத்தை ஆதாரமாக காண்பிக்கும் ஈடி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த அரபிந்தோ பார்மா குழுமத்தைச் சேர்ந்த இயக்குனரான பினாகா சரத் சந்திர ரெட்டி மீது அமலாக்கத்துறை கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக கடந்த20022 நவம்பர் 10ம் தேதி அமலாக்கத் துறை அரபிந்தோ பார்மா நிறுவனங்களில் ரெய்டு நடத்தியது. இயக்குனர் பினாகா சரத் சந்திர ரெட்டி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் நவம்பர 15ம் தேதியே பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹5 கோடி நிதி தருகிறது.

இதன் தொடர்ச்சியாக அவர் அப்ரூவராக அனுமதி தரப்படுகிறது. பின்னர், மேலும் ₹35 கோடியை அரபிந்தோ பார்மா மற்றும் அவருக்கு சொந்தமான ஏபிஎல் ஹெல்த் கேர் நிறுவனங்கள் பாஜவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்துள்ளது. இப்படி பாஜவுக்கு ₹40 கோடியை நன்கொடையாக கொடுத்தவர் தந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஆம்ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான சவுரப் பாரதி கூறுகையில், ரெய்டு நடத்தி கைது செய்து மிரட்டி பணம் பறித்த பாஜ அரசு, பின்னர் சரத் சந்திர ரெட்டி அப்ரூவராக அனுமதி அளித்தது. அப்போது அவர் கொடுத்த பொய்யான வாக்குமூலத்தை ஆதாரமாக காட்டி தற்போது கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.

The post ரெய்டு நடத்தி கைது செய்யப்பட்டதும் பாஜவுக்கு ₹40 கோடி நிதி தந்து அப்ரூவராக மாறிய தொழிலதிபர்: கெஜ்ரிவால் கைதுக்கு அவரது சாட்சியத்தை ஆதாரமாக காண்பிக்கும் ஈடி appeared first on Dinakaran.

Tags : Baja ,ED ,Kejriwal ,New Delhi ,Enforcement Directorate ,Binaka Sarath Chandra Reddy ,Hyderabad ,Aurobindo Pharma Group ,Delhi ,Enforcement Department ,BJP ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...