×

சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் உள்ள  அரசு நடுநிலைப்பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கம்புணரி அருகே எஸ் புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வாராப்பூர், கட்டையம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் ஓட்டுக் கட்டிடம் 60 ஆண்டு பழமையானது. தற்போது சிதிலமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. இதனால் இவ்வூரில் உள்ள சீரணி அரங்க கட்டிடத்தில் மாணவ, மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். 1 முதல் 8 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு இந்த அரங்கம் போதவில்லை. மேலும் வகுப்பறைகள் தனித்தனியே இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டித் தர உத்தரவிடுமாறு, தமிழக முதல்வருக்கு காணொளி மற்றும் கடிதம் மூலமும் கோரிக்கை விடுத்துள்ளனார்….

The post சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Warapur Panchayat, S Putur Union ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா