×

கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை இன்று 03.12.2021 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் பேசும்போது, கடந்த 04.09.2021 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்று அறிவிப்பு  வெளியிடப்பட்டது. மேற்படி அறிவிப்பினை செயல்படுத்திட எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக முதற்கட்டமாக  நான்கு அறிவியல் மற்றும் கலைக் கல்லுரிகள் துவக்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 02.11.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் B.Com, BBA, BCA, B.Sc. Computer Science ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் தற்போது, சைவ சித்தாந்தம் சான்றிதழ் படிப்பிற்கான புதிய வகுப்பு துவக்கிட சென்னை பல்கலைகழகத்தின் அனுமதி பெறப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்று 23.11.2021 அன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.01.12.2021 வரை 100 மாணவ மாணவியர்கள் சேர்க்கை முடிக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த சான்றிதழ் வகுப்பு துவங்குவதற்கும் முறையாக உயர்கல்வி பயில்வதற்கு இயலாத மாணவ, மாணவிகளின் நிலையை உணர்ந்த ஆட்சிப் பொருப்பேற்ற ஆறு மாதங்களுக்கு இக்கல்லூரியை துவக்கி வைத்த படிப்பதற்க்கு இடம் கிடைத்தாலும் அதற்கு உண்டான கட்டணத்தை செலுத்தமுடியாமல் இருந்த ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை தந்து கட்டணத்தை அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இத்துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை 1000  தாண்டும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த வகுப்பிற்கு மாணவர்கள் வருவார்களா, என கேள்வி எழுப்பப்பட்டது. இதன் தொடக்க விளம்பரம் வெளியிடப்பட்டு 4 நாட்களிலே 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது எதை காட்டுகிறது என்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் எதை எல்லாம் தொடுகிறார்களோ, அதில் வெற்றி பெறுவார்கள். அதேபோல் இந்த கல்லூரி இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகளின் பொருளாதார சூழ்நிலையை  நல்ல நிலைக்கு உயர்த்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  தமிழ்நாட்டில் தான் நல்ல பல பணிகளுக்கு இடையூறுகள் அதிகமாக கிடைக்கின்ற சூழ்நிலை நிலவிக் கொண்டுள்ளது. எதோ இந்த கல்லூரி ஆரம்பித்து விட்டோம் 284 பேர் படிக்கிறார்கள் என்று சாதாரணமாக நினைவித்து விட்டால் கூட அதற்கு பின்னால் இக்கல்லூரி அமைவதற்கு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கூர்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்கல்லூரியை கொண்டு வரவேண்டுமா என்று நினைக்க கூடிய அளவிற்கு பல வகையில் பல தொந்தரவுகள். ஆனால் இந்த இடைறுகளை எல்லாம் தாண்டி இக்கல்லூரி ஆரம்பித்து இருக்கிறோம் என்றால் எல்லா தடைகற்களையும் படிகற்களாக மாற்றி பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சாரும் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இந்த கல்லூரிக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற இடையூறுகளையும் தாண்டி நீதியரசர்கள் வழிகாட்டுதலின்படி கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பை முறையாக கற்று மாணவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஒட்டசத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை கல்லூரியில் சைவ இலக்கிய வகுப்புகள், விளாத்திக்குளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவவியல் மற்றும் வைணவவியல் போன்ற சான்றிதழ் வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து பயனமையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. சக்கரவர்த்தி, வைணவ கல்லூரி முதல்வர் திரு. சந்தோஷ்பாபு, கொளத்தூர் எவர்கிரீன் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் திரு. புருதோத்தம்மன், கூடுதல் ஆணையர் திருமதி சி.ஹரிப்ரியா, அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி த.காவேரி, அகியோர் கலந்துக் கொண்டனர். …

The post கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைவ சித்தாந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Saiva Siddhanta ,Kolathur Kapaleeswarar College of Arts and Science ,Chennai ,Shekharbabu ,Kolathur Kabaleeswarar College of Arts and Science ,Department of Hindu Religious Charities ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை...