×

மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறக்கம் புஷ்பக் மாதிரி ராக்கெட் சோதனை வெற்றி; இஸ்ரோ தகவல்

சென்னை: இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புஷ்பக் என பெயரிடப்பட்டுள்ள இறக்கையுடன் கூடிய இந்த மாதிரி ராக்கெட், விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் உயரே கொண்டு செல்லப்பட்டு, 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. 4 கிமீ தொலைவில் இருந்தபோது தானாக ஓடுபாதையை அணுகிய புஷ்பக், துல்லியமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.

பின்னர் அதன் பிரேக் பாராசூட், லேண்டிங் கியர் பிரேக்குகள் மற்றும் முன்பக்க ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை பயன்படுத்தி ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டது. மறுபயன்பாட்டு ராக்கெட்டின் தானியங்கி தரையிறங்கும் திறனை சோதனை நிரூபித்துள்ளது. விண்வெளியில் இருந்து திரும்பும் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் அணுகுமுறை மற்றும் அதிவேகத்தில் தரையிறங்கும் நிலைமைகளை, இன்றைய பரிசோதனை தெளிவுபடுத்தியிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறக்கம் புஷ்பக் மாதிரி ராக்கெட் சோதனை வெற்றி; இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,CHENNAI ,Twitter ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...