- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருநெல்வேலி
- புலிப்பட்டி
- ஆவுடையார் கோயில்
- நகுடி
- ஸ்ரீவைகுண்டம்
- போடி
- நாங்குநேரி
- மண்டபம்
- காரைக்குடி
- ஆனைமலை
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுகிறது. ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி 40 மிமீ, புலிப்பட்டி, ஆவுடையார் கோயில், நாகுடி, ஸ்ரீவைகுண்டம் 20 மிமீ, போடி, நாங்குநேரி, மண்டபம், காரைக்குடி, ஆனைமலை, அறந்தாங்கி 10 மிமீ மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னை, கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கோவை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் உணரப்பட்டது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 28ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.
The post சில இடங்களில் மழை தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில் appeared first on Dinakaran.