×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்..!!

சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சரும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது.மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது, பாஜக அரசின் கீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை நடவடிக்கை. ED என்ற பாஜகவின் ஏவல் துறை மூலம் அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கையை மோடியின் பாசிச அரசு அரங்கேற்றியுள்ளது.

காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம், எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பது ஆகியவற்றின் தொடர்ச்சி கெஜ்ரிவால் கைது என்றும் அவர் தெரிவித்தார். ஏதேச்சதிகாரத்தின் உச்சத்தில் பாஜக உலவுவதற்கு தேர்தல் தோல்வி பயமே காரணம். எதிரிகள் 10 பேர் இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு வெல்பவனே வீரன். போட்டிக்கே வரவிடாமல் செய்து, வெற்றி பெற முயல்வது கோழைத்தனம், அயோக்கியத்தனம்; இதை அச்சு பிறழாமல் பாஜக அரசு செய்து வருகிறது. கைது நடவடிக்கை காரணமாக இந்தியா கூட்டணியின் மீது மக்களின் நன்மதிப்பு அதிகரித்து வருகிறது என்பதே கள எதார்த்தம். ஜனநாயகத்தை சர்வாதிகாரத்தால் ஒருபோதும் வீழ்த்த முடியாது. மோடி அரசின் ஏதேச்சதிகாரப் போக்கிற்கு தேர்தல் நாளில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Jawahirulla ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Chennai ,People's Party ,India Alliance ,Enforcement Department ,Jawahirullah ,Humanist People's Party ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...