×

ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக ஆட்டம் போடும் பாஜக: வைகோ காட்டம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று அளித்த பேட்டி: ஜணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் இந்த தேர்தல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற கோஷத்தை வைக்கும் இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகளின் கை ஓங்கி விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாஜ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதல்வரை கைது செய்துள்ளது. சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். எனவே ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.நேற்று துரை வைகோ ஸ்ரீரங்கத்தில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, இதை நல்லதாக பார்க்கிறேன் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு வைகோ சென்றார்.

The post ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிராக ஆட்டம் போடும் பாஜக: வைகோ காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vaiko Kattam ,Tiruchi ,Madhyamik ,general secretary ,Vaiko ,Tiruchi airport ,Jananayak ,Hindutva ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...