×

மியாமி ஓபன் டென்னிஸ்: எலெனா ரைபகினா 3வது சுற்றுக்கு தகுதி

மியாமி:அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று போட்டியில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-2, 6-4 என ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 7-6, 6-4 என ஜெர்மனியின் லாரா சீக்மண்ட்டையும், கிரீஸ் நாட்டின் மரியா சக்கரி, 6-2, 6-2, என சீனாவின் யுவான் யூவையும், உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-5, 7-5 என ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லேவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நுழைந்தனர்.

சீனாவின் வாங் சியு, 6-3, 6-2 என ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவையும், 4ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 3-6, 7-5, 6-4 என டென்மார்க்கின் கிளாரா டாசனை வீழ்த்தினார். பெலாரசின் விக்டோரியா அசரென்கா 7-5, 3-6, 6-4 என அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்சை வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

The post மியாமி ஓபன் டென்னிஸ்: எலெனா ரைபகினா 3வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Miami Open Tennis ,Elena Raibakhina ,Miami ,Miami Open ,United States ,Madison Keys ,Diana Schneider ,Russia ,Latvia ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்