- ஆளுநர் ஆர் என் ரவி
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- மு. கே. ஸ்டாலின்
- ஆளுநர் R.R.
- என் ரவி
டெல்லி: பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவரை மீண்டும் அமைச்சராக்க பரிந்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘பொன்முடிக்கு பதவியேற்பை ஆளுநர் நடத்தாதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நாளை (இன்று) வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம். இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து பொன்முடி பதவியேற்பிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்கிறார். இந்நிலையில், பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டுள்ளார். பொன்முடிக்கு அமைச்சராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்ட தகவல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
The post பொன்முடி வழக்கு: உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!! appeared first on Dinakaran.