×

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தென்காசியில் வாக்காளர் விழிப்புணர்வு பைக் பேரணி

*கலெக்டர் கமல்கிஷோர் பங்கேற்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு, நேர்மையாக வாக்களித்தலை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கோலம் போடுதல், 3 லட்சம் வாக்காளர்களிடம் கையெழுத்து பெறும் முகாம், மனிதசங்கிலி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனை தொடர்ந்து நேற்று பைக் பேரணி தென்காசி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி பழைய பஸ்நிலையம், மேலகரம் வழியாக குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலை பூங்கா வரை மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் 100% வாக்களித்தல், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், 100% நேர்மையாக வாக்களியுங்கள், தேர்தல் திருவிழா – தேசத்தின் பெருவிழா, வாக்களிப்பது நமது கடமை போன்ற கருத்துகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், குரல் எழுப்பியும் சென்றனர். பேரணியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட போக்குவரத்து அலுவலர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயரத்தினராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகம்மாள், போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் ராஜன், மணிபாரதி, மகளிர் திட்ட உதவிதிட்ட அலுவலர்கள் சிவக்குமார், மாரீஸ்வரன், பிரபாகர், சாமத்துரை, டேவிட் ஜெயசிங், கலைச்செல்வி, மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள்,

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்கள், கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஜே.பி.கல்லூரிமாணவர்கள், செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தென்காசி வாகன விற்பனையாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட750க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பேரணிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தென்காசியில் வாக்காளர் விழிப்புணர்வு பைக் பேரணி appeared first on Dinakaran.

Tags : awareness bike rally ,South Asia ,KAMALKISHORE ,TENKASI ,TENKASSI DISTRICT ,HUMAN CHAIN ,Voter Awareness Bike Rally ,Dinakaran ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…