×

வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தூத்துக்குடி வந்த கனிமொழி எம்பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி : வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக தூத்துக்குடி வருகைதந்த கனிமொழி எம்பிக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் கனிமொழி எம்பி போட்டியிடுகிறார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் முதல்முறையாக தூத்துக்குடி வருகை தந்த கனிமொழிக்கு வாகைக்குளம் விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் வரவேற்றனர்.

இதில் மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், சரவணக்குமார், இளையராஜா, ரமேஷ், மாவட்ட அணி நிர்வாகிகள் ராமஜெயம், வீரபாகு, ரகுராமன், தயாநிதிபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜ், கணேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சாயர்புரம் ராஜேஷ் ரவிச்சந்தர், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ்,

மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை தலைவர் சந்திரசேகர், நகர துணை செயலாளர் மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி 3வது மைல் பைபாஸ் சந்திப்பில் கனிமொழி எம்பிக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வடக்கு மாவட்ட திமுக அலுவலமான கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் தேவர் சிலை, அம்பேத்கர், பெரியார், குரூஸ்பர்னாந்து, காந்தி, காமராஜர், அண்ணா, வஉசி, இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், நெசவாளரணி மாநில துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி,

நகர்மன்ற தலைவர் கருணாநிதி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் அய்யாத்துரைபாண்டியன்,
தங்கமாரியம்மாள், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, மண்டல தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குபேர்இளம்பரிதி, சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர்,

முருகஇசக்கி, ஜெயக்கனி, பரமசிவம், வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, சுபேந்திரன், ஆனந்த்காபிரியேல்ராஜ், வட்ட செயலாளர்கள் பாலு (எ) பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் காங். மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் வை. சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

‘‘அதே பாசத்தை எதிர்பார்க்கிறேன்”

3வது மைலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில், நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் 2வது முறையாக உங்களுக்கு பணியாற்றுவதற்கு ஓய்வின்றி உழைத்த கலைஞர் வழியில் ஓய்வின்றி உழைக்கும் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்னை இங்கு உங்களிடம் ஒப்படைத்துள்ளார். உங்களுடைய அன்பையும், பாசத்தையும் பெற்றிருக்கும் நான் தொடர்ந்து தேர்தல் களத்திலும் அதே பாசத்தையும் அன்பையும் எதிர்பார்க்கிறேன். கூட்டணி கட்சியினரும் எனக்கு அளித்த உற்சாகம் மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பாக இருக்கும். எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

The post வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தூத்துக்குடி வந்த கனிமொழி எம்பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanimozhi MP ,Thoothukudi ,DMK ,Thoothukudi North and South District ,Ministers ,Geethajeevan ,Anitha Radhakrishnan ,Thoothukudi Parliamentary ,Dinakaran ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...