×

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா?.. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ம் தேதி கடிதம் எழுதினார். ஆனால் அவர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவை ஆர்.என்.ரவி மீறி செயல்படுவதாக தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்ற கண்டனத்தை அடுத்து ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இன்றைக்குள் முடிவு எடுக்காவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம், ஆளுநரை எச்சரித்திருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று எளிய முறையில் பதவி ஏற்புவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைக்கு பிறகும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன்வராததால் அவர் பதவி விலகுவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா?.. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor ,Ravi ,Chennai ,Governor RN ,Chief Minister ,M. K. Stalin ,R. N. Ravi ,Ponmudi ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்