×

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை

டெல்லி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தேர்வை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை காங்கிரஸ் பெற்றது. இதுபற்றி மேலிட பொறுப்பாளர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து 9 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட பெயர் பட்டியலை தயார் செய்து, இந்த பட்டியலுடன் நேற்று முன்தினம் செல்வப்பெருந்தகை டெல்லி சென்றார். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து டெல்லியில் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான ஆலோசனையில் ராகுல் காந்தி, அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Congressional ,Tamil Nadu ,Delhi ,Congress ,Puducherry ,Dimuka Coalition ,
× RELATED மோடி அலை எதுவும் இல்லை, விஷம்தான் பரவியுள்ளது: காங்கிரஸ் விமர்சனம்