×

காவேரிப்பட்டணம் அருகே டேங்க் ஆபரேட்டர் கத்தியால் குத்திக்கொலை

*போதையில் தொழிலாளி வெறிச்செயல்

காவேரிப்பட்டணம் :கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் வேலன்(42). இவர் எர்ரஅள்ளி ஊராட்சியில், தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில், காவேரிப்பட்டணம்-பாலக்கோடு ரோடு அருகேயுள்ள முனியப்பன் கோயில் ஏரி அருகே, தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக சென்றார்.

அப்போது, கருக்கன்சாவடியைச் சேர்ந்த தொழிலாளி முனியப்பன்(30) என்பவர், குடிபோதையில் வேலனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன், மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து, வேலனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வேலன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்த முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அந்த வழியாக சென்ற வேலனின் உறவினர்கள், வேலன் கொலை செய்யப்பட்டதை கண்டு ஆத்திரமடைந்தனர். பின்னர், ஏரி கரையோரம் மீன் பிடிப்பதற்கு தேவையான பொருட்கள் வைத்திருந்த கொட்டகையை தீ வைத்து எரித்தனர். அப்போது கொட்டகையில் இருந்த ஒரு டூவீலரும் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு, காவேரிப்பட்டணம்- பாலக்கோடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தப்பியோடிய முனியப்பனை கைது செய்ய வேண்டும் என ேகாரிக்ைக விடுத்தனர். இன்று(நேற்று) இரவுக்குள் கைது செய்வதாக உறுதி கூறியதன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து உயிரிழந்த வேலனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முனியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post காவேரிப்பட்டணம் அருகே டேங்க் ஆபரேட்டர் கத்தியால் குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Cauverypatnam ,Kaveripatnam ,Velan ,Karukkanchavadi ,Kaveripatnam, Krishnagiri district ,Erraalli panchayat ,Muniappan temple ,Kaveripatnam-Palakodu road ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...