×

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து டெல்லியில் ஆலோசனை

டெல்லி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான ஆலோசனையில் ராகுல் காந்தி, அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் பங்கேற்ற்றுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்வது குறித்து டெல்லியில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress ,Tamil Nadu ,Rahul Gandhi ,Ajoikumar ,Sriwala Prasad ,President ,Mallikarjuna Karke ,Tamil Nadu Congress Committee ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...