×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பெயரை எடப்பாடி வெளியிட்டார்.

மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை அறிவித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையை பழனிசாமி வெளியிடுகிறார்.

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Extraordinary District Secretaries ,Chennai ,Edapadi Palanisami ,Adimuka District Secretaries ,Adimuka ,Tamil Nadu ,Puducherry ,Superman ,Chennai Raiappetta ,District ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு