×

கடலூரில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டி.. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை : மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன. வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் அதன் கூட்டணி கட்சிகளான பாமகவுக்கு 10 இடங்களும், தமாகாவுக்கு 3 இடங்களும் அமமுகவிற்கு 2 இடங்களும், புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு..

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – கே.பாலு
ஆரணி – அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
விழுப்புரம் – முரளி சங்கர்
சேலம் -ந.அண்ணாதுரை
காஞ்சிபுரம்

தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்

வேலூர் (புதிய நீதி கட்சி ) – ஏ.சி.சண்முகம்

பெரம்பலூர் (இந்திய ஜனநாயக கட்சி) – பாரிவேந்தர்

சிவகங்கை (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்)

தென்காசி (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)

அமமுக களம் காணும் தொகுதிகள்

திருச்சி, தேனி

தமாகா போட்டியிடும் தொகுதிகள்

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

ராமநாதபுரம் – ஓபிஎஸ்

பாஜக போட்டியிடும் 19 தொகுதிகள்

திருவள்ளூர்,
வட சென்னை,
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
கிருஷ்ணகிரி – சி நரசிம்மன்
திருவண்ணாமலை,
நாமக்கல்,
திருப்பூர்,
நீலகிரி, – எல் முருகன்
கோயம்புத்தூர் – அண்ணாமலை
பொள்ளாச்சி,
கரூர்,
சிதம்பரம்,
நாகப்பட்டினம்,
தஞ்சாவூர்,
மதுரை,
விருதுநகர்,
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

The post கடலூரில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டி.. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Bhamaka ,BJP ,Lok Sabha elections ,Chennai ,Lok Sabha ,Tamil Nadu ,Bamako ,Tamaka ,Tangarbachan ,BJP Alliance ,Dinakaran ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...