- கம்பூம்
- குடலூர்
- நகராட்சி ஆணையர்
- வாசுதேவன்
- கம்பம்
- மக்களவைத் தேர்தல்
- கம்பம் மாநகராட்சி
- நிரல்
- கலெக்டர்
- ஷஜீவனா உத்தரா
- தேர்தல் விழிப்புணர்வு பேரணி
- கம்பா
- தின மலர்
கூடலூர், மார்ச் 22: கம்பத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மக்களவைத் தேர்தலை ஒட்டி கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில் கம்பம் நகராட்சி மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பேரணி கம்பத்தில் நடைபெற்றது.
கம்பம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் முன்னிலையில், இந்தியக் குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவோம், அச்சமின்றியும் மதம், இனம், சாதி, சமூகத் தாக்கமின்றியும், தூண்டுதல்களின்றியும் வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதை அடுத்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது நகராட்சியில் துவங்கி, மெயி ன்ரோடு வழியாக அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், வஉசி திடல், காந்தி சிலை வழியாக அரசமரம் பகுதியை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், எனது வாக்கு எனது உரிமை என்றும் கோஷம் எழுப்பி சென்றனர். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் சக்திவேல், மகளிர் திட்டம் உதவி திட்டஅலுவலர் கள் கங்காகௌரி, சுந்தரமூர்த்தி, சமுதாய அமைப்பாளர்கள் ரஞ்சிதம், குணசுந்தரி மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர், பெண்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
The post கம்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.