×

கோடை வறட்சியால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு; வருவாய் பாதிப்பு

 

பல்லடம், மார்ச் 22: நடப்பு சீசனில் மழை பற்றாக்குறை காரணமாக மாசி பட்ட சாகுபடி முடங்கி கிடக்கிறது. பல விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் நிலத்தை தரிசாக போட்டு வைத்துள்ளனர். விவசாயம் முடங்கிக் கிடப்பதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபடுவர்.

நாள்தோறும் ஏதாவது ஒரு கூட்டம் நடந்து கொண்டே இருக்கும். கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்து அழைத்துச் சென்றன.தற்போது கட்சித் தலைவர்களின் வருகைக்காக கூட்டத்தை சேர்க்க கட்சி நிர்வாகிகள் ஆட்களை திரட்டுவர்.

கோடை வெயில் வாட்டி எடுப்பதால் கட்சி தொண்டர்களே கூட்டங்களுக்கு செல்ல தயக்கம் காட்டும் நிலை உள்ளது. அடி மட்டத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமே கூட்டங்களுக்குச் செல்கின்றனர். அவர்களும் விருப்பப்பட்டுச் செல்வதில்லை. கூலி கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் செல்கின்றனர்.

இது குறித்து, விவசாய தொழிலாளர் சிலர் கூறுகையில், ‘‘ஆண்களுக்கு பணத்துடன் மது பானம், பிரியாணி தருகின்றனர். பெண்களுக்கு பணம் மட்டும் தருவர். கோடையில் விவசாய வேலை குறைவாக இருப்பதால், வேறு வழியின்றி அரசியல் கட்சியினர் அழைக்கும் கூட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

The post கோடை வறட்சியால் விவசாய தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு; வருவாய் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Masi ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது