×

நீர்நிலையை பாதுகாத்திட கருவேல மரத்தை அகற்ற கோரிக்கை

 

மண்டபம், மார்ச் 22: மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை அருகே நீர்பிடிப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டபம் கேம்ப் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மழைநீர் தேக்கம் அடைந்து உள்ளது. இந்த மழைநீர்கள் கடுமையான தட்பவெட்ப நிலை மற்றும் வெயில் தாக்கத்தால் வற்றி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கமாக பள்ளத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடிகள் படர்ந்து உள்ளது. இதனாலும் நீர்கள் அதிவேகமாக வற்றி வருகிறது. ஆதலால் நீர் நிலைகளை காத்திட மண்டபம் கேம்ப் அருகே நீர்நிலை பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் செடிகளை அகற்றி நீர்த்தேக்கத்தை பாதுகாத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post நீர்நிலையை பாதுகாத்திட கருவேல மரத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,National Highway ,Mandapam Camp ,Mandapam Municipality ,Dinakaran ,
× RELATED சாலை ஓரத்தில் இடையூறு கருவேல மரங்கள் அகற்றம்