×

நாகையில் போக்குவரத்து மாற்றம்

 

நாகப்பட்டினம்,மார்ச்22: நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி வரும் 22ம் தேதி வரையிலும் மற்றும் 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு 21ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகூர், திட்டச்சேரி, காரைக்கால் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி இடதுபுறமாக திரும்பி வடகாடு வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல வேண்டும். காரைக்கால், திட்டச்சேரி, நாகூரிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம் நோக்கி செல்லும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

The post நாகையில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Naga ,Nagapattinam ,Nagapattinam Parliamentary Constituency ,Nagapattinam Collector ,Collector ,Janidam Varghese ,Election Commission of India ,Nagai ,Dinakaran ,
× RELATED பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த...