×

காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகளில் 2.10 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 2.10 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விபரம் அடங்கிய, இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 17 லட்சத்து 32 ஆயிரத்து 946 வாக்காளர்கள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பாக, 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 16 லட்சத்து 43 ஆயிரத்து 656 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஐந்து ஆண்டுகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம்கள் மூலம், 89 ஆயிரத்து 290 வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதேபோன்று, பெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியில் தாம்பரம், பல்லாவரம், அம்பத்துார், மதுரவாயல், ஆலந்தூர், பெரும்புதூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விபரம் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 22ல் வெளியிடப்பட்டது. பெரும்புதூர் தொகுதியில் 23 லட்சத்து 73 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பாக 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, இதே தொகுதியில் 22 லட்சத்து 53 ஆயிரத்து 041 வாக்காளர்கள் இருந்தனர். 5 ஆண்டுகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம்கள் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 445 வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

The post காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகளில் 2.10 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Perumbudur ,Kanchipuram Parliamentary Constituency ,Uthramerur ,Seyyur ,Madhuranthakam ,Chengalpattu ,Tirupporur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...