×

பறக்கும்படை, நிலைய கண்காணிப்பு குழுவை சேர்ந்த 180 காவலர்களுக்கு பயிற்சி எஸ்பி பங்கேற்பு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில்

வேலூர், மார்ச் 22: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளடக்கிய பறக்கும் படை மற்றும் நிலைய கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று வீதம் மொத்தம் 15 பறக்கும்படைகள் மற்றும் 15 நிலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் மொத்தம் 180 காவல்துறை அலுவலர்கள் ஒரு ஷிப்டுக்கு 60 நபர்கள் என 3 ஷிப்ட்களில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் 2 நாட்கள் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி நிறைவு பெற்றது. அப்போது காவலர்கள் செயல்படும் விதம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏடிஎஸ்பிகள் பாஸ்கரன் கோட்டீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பறக்கும்படை, நிலைய கண்காணிப்பு குழுவை சேர்ந்த 180 காவலர்களுக்கு பயிற்சி எஸ்பி பங்கேற்பு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் appeared first on Dinakaran.

Tags : Flying Force ,Station Monitoring Team SP ,Vellore ,Flying ,Vellore Lok Sabha ,Station Monitoring Group ,SP ,Dinakaran ,
× RELATED வாகன சோதனையில் ₹1.62 லட்சம் பறிமுதல்