×

வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

சேலம், மார்ச் 23: சேலம் சித்தர்கோயில் மூலப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன்(26). இவர் நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி ரயில்வே கேட் அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மாதேஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில், மூன்று பேரும் சேர்ந்து மாதேஸ்வரனை பீர் பாட்டிலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மாதேஸ்வரனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், கார்த்தி (எ) கொத்து கார்த்தி (30), லோகு (36), கலைக்குமார் (24) ஆகிய மூன்று பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Matheswaran ,Moolapillaiyar Koil Street, Salem Siddhar Temple ,Annadanapatti ,gate ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழக...