×

கோவையில் அண்ணாமலை போட்டி: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன.

அந்த வகையில், 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமனாலும் வெளியாகும் என்று அண்ணாமலை இன்று கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை முதல் கட்டமாக அக்கட்சி வெளியிட்டுள்ளது.

* கோவை: அண்ணாமலை

* தென் சென்னை: தமிழிசை சவுந்தரராஜன்

* தூத்துக்குடி: நயினார் நாகேந்திரன்

* கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்

* மத்திய சென்னை: மனோஜ் பி செல்வம்

* வேலூர்: ஏசி சண்முகம்

* கிருஷ்ணகிரி: நரசிம்மன்

* நீலகிரி (தனி): எல் முருகன்

* பெரம்பலூர்: பாரிவேந்தர் (ஐ.ஜே.கே)

The post கோவையில் அண்ணாமலை போட்டி: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக appeared first on Dinakaran.

Tags : Annamalai Contest ,BJP ,Lok Sabha elections ,Tamil Nadu ,Chennai ,National Democratic Alliance ,Pa. M. G10 Constituencies ,Tamil State Congress ,D. D. V ,DINAKARAN ,J. K ,Annamalai Match ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...