×

தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு முக்கியமானது: முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா

புதுடெல்லி: ஐபிஎல் 2024க்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி, குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியும் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தோனி 2023 சீசனில் சிஎஸ்கே கேப்டனாக தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையைப் பெற்றார். இது 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார்.

2024ம் ஆண்டு தொடரில் ஐந்து முறை சாம்பியனான புதிய கேப்டனிடம் 42 வயதான தோனி தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பார் என்பதால், தனிப்பட்ட முறையில் தோனியை விட சென்னை அணிக்கே இந்த ஆண்டு அதிக முக்கியத்துவம் உள்ளது என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.

தோனியை விட இந்த ஆண்டு சென்னை அணிக்கே மிகவும் முக்கியமானதாக இருக்கலாம், ஏனென்றால் அவர் யாரை கேப்டனாக தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம். அவருக்கு வயது 42. அவர் இன்னும் ஐந்து வருடங்கள் அல்லது குறைந்தது 2-3 வருடங்கள் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன்” எனவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளாக தோனியை கேப்டனாக பார்த்து வந்த ரசிகர்கள் இனிமேல் அவரை ஒரு கேப்டனாக பார்க்க முடியாது என சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவருக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம் எனவும் பரவலாக பேசப்படுகிறது.

The post தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு முக்கியமானது: முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா appeared first on Dinakaran.

Tags : CSK ,Dhoni ,Suresh Raina ,New Delhi ,IPL 2024 ,Chennai Super Kings ,MS Dhoni ,IPL ,Dinakaran ,
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...