×

வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழை: 9ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் பாதிப்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இன்று காலை பெய்த கோடை மழையால் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சேகரிக்கப்பட்டு வைத்த உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி, கடினல் வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த ஒருவாரம் காலமாக வேதாரண்யம் பகுதியில் இரவு, பகலாக உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அதிகாலையில் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கோடை மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒருவாரம் காலதாமதம் ஆகும் என்பதால் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பு பாத்திகளில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்படும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வேதாரண்யத்தில் அடுத்த சில வாரங்கள் உப்பு ஏற்றுமதியில் பாதிப்பு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழை: 9ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagai ,Agasthyan ,School ,Katinal Field ,Kodiakkadu ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...