×

ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி

மும்பை: ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித்சர்மா தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் ரோகித்சர்மாவை அதிரடியாக நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை அந்த பொறுப்புக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா ஒரு முறை கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் ரோகித் ஷர்மாவை ஏன் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினோம் என்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வெளியிட்ட விளக்கத்தை ரோகித் மனைவி நிராகரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.

அது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த முகாமில் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நேற்று தான் வந்து பங்கேற்றார். அப்போதும் அவர், ஹர்திக் பாண்டியாவை சந்திக்காமல் சென்று விட்டார் என்று செய்திகள் வெளியானது.இதுபோன்று வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்ற போது கூட ரோஹித் சர்மா பங்கேற்காமல் புறக்கணித்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் அனைத்து வீரர்களும் பங்கு பெற்ற பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்றது.

இதில் வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் சர்மாவை பார்த்த ஹர்திக் பாண்டியா நேரடியாக அவரிடம் சென்று கட்டி அணைத்தார். இதனால் ரோகித் சர்மாவும் அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைப் பார்த்தவுடன் மற்ற வீரர்களும் கைதட்டி வரவேற்றனர். அதன் பிறகு பயிற்சியாளர் மார்க் பவுச்சர், அனைத்து வீரர்களையும் அழைத்து இந்த சீசனுக்கான யுக்திகளை பேச ஆரம்பித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இருந்த பிரச்சனை தற்போது இந்த நிகழ்வின் மூலம் முடிவுக்கு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rohit ,Hardik Pandya ,Mumbai ,Mumbai Indians ,IPL ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்...