- ராம ஸ்ரீநிவாசன்
- அண்ணாமலை
- திரிஷி
- ஜே. க.
- திருச்சி பா. ஜே. க.
- மதுரை
- பா. ஜே. கே. திருச்சி பா.
- அரசுத்தலைவர் நாயகம்
- தின மலர்
திருச்சி: திருச்சி தொகுதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வலுக்கிறது. திருச்சி பா.ஜ.க. வேட்பாளராக மதுரையைச் சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக அறிவிக்க திருச்சி பா.ஜ.க.வில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வெளியூர்காரரை திருச்சி வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு டெபாசிட் காலியாகும் என்று திருச்சி சூர்யா எச்சரித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம். மண்ணின் மைந்தரை களம் இறக்குங்கள் என்று கூறினார். இந்நிலையில் மண்ணின் மைந்தரையே திருச்சி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருச்சி சூர்யாவுக்கு ராம ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அந்த மண்ணுக்கான மைந்தராக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் ராம ஸ்ரீனிவாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். திருச்சி சூர்யாவுக்கு அளித்துள்ள பதிலடி மூலம் ராம ஸ்ரீனிவாசன் திருச்சியில் போட்டியிட உறுதி காட்டுவது தெரிய வந்துள்ளது. திருச்சி தொகுதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வலுக்கிறது.
The post பா.ஜ.க.வில் வலுக்கும் உட்கட்சி மோதல்: அண்ணாமலை ஆதரவாளருக்கு ராம ஸ்ரீனிவாசன் பதிலடி appeared first on Dinakaran.