- ஓ. பன்னீர்
- செல்வம்
- சென்னை
- தமிழ் மாநில காங்கிரஸ்
- பாஜக
- பன்னீர்செல்வம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணாமலை
- கிஷன்ரெட்டி
- எல்.முருகன்
- மூத்த
- அரவிந்தா
- OPS
- ஓ.
- பன்னீர்
- தின மலர்
சென்னை: பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த மேனன் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு தலைவர்கள் கமலாலயத்தில் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். முதலாவதாக, புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், டிடிவி தினகரன் கையெழுத்திட்டார். எந்த தொகுதிகள் என்பது முடிவாகவில்லை. அதன் தொடர்ச்சியாக, கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த தமாகா சார்பில் ஜி.கே.வாசன், பொருளாளர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் தேனி தொகுதியும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சை தொகுதியை த.மா.கா. கேட்டுள்ளது; அதே தொகுதியை வைத்திலிங்கம் மகனுக்காக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி கேட்கும் தொகுதிகளை பாஜகவால் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. சின்னம் மற்றும் கேட்கும் தொகுதி கிடைக்காத சூழலால் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
The post த.மா.கா., ஓபிஎஸ் அணிக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி: ஓ.பன்னீர்செல்வம் இன்று அவசர ஆலோசனை appeared first on Dinakaran.