×

சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்

 

கந்தர்வகோட்டை, மார்ச்21: சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று உலக சிட்டுக்குருவி தினவிழாவில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டு நாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் இராஜாத்தி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் புவனேஸ்வரி வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துளிர் திறனறிவுத் தேர்வு மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரும், கந்தர்வகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா துளிர் திறனறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

 

The post சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் appeared first on Dinakaran.

Tags : GANDHARVAKOTTA ,World Sparrow Day ,Pudukottai District ,Kandarvakottai Union Kattu Nawal Panchayat Union Middle School of Tamil Nadu Science Movement ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...