×

கொள்ளிடம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

 

கொள்ளிடம், மார்ச் 21: கொள்ளிடம் சோதனை சாவடியில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று எஸ்பி மீனா உத்தரவின் பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ், லாரி, கார் மற்றும் இருசக்க வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சந்தேகப்படும்படியாக யாராவது ரொக்கம் எடுத்துச் செல்கிறார்களா அல்லது தேர்தல் விதிக்கு புறம்பாக பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா என்றும் வாகனங்களை மறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதேபோல் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை சாவடியில் அடுத்தடுத்து வாகனத் தணிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post கொள்ளிடம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Kollidam river bridge ,Sirkazhi ,Chidambaram ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை அருகே நடுரோட்டில் அரசு...