×

விழிப்புணர்வு கூட்டம்

 

தொண்டி, மார்ச் 21: கடத்தலை தடுக்கும் விதமாக மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக தொண்டி கடல் பகுதியில் அதிகளவில் கடத்தல் பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் மீனவர்களிடம் கடத்தல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து தேவிப்பட்டினம் கடற்கரை காவல்நிலையம் சரகம் தேவிப்பட்டினத்தில் நேற்று மீனவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போதை பொருள் கடத்துவது கடத்துவதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம். மேலும் படகு உரிமையாளர் மீது வழக்கு தொடரபட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், போதைபொருள் கடத்தல் சம்பந்தமாக மீனவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து காவல் துறையினருக்கு தகவல் தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கியூ பிராஞ் காவல் ஆய்வாளர் சிவகுமார், கடற்கரை காவல் சார்பு ஆய்வாளர் அய்யனார், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், அமலாக்க துறை சார்பு ஆய்வாளர் குருநாதன் மற்றும் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்கள் இளையராஜா, ராமர், வனத்துறை சதீஷ்குமார், மீனவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

The post விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Tondi Sea ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...