×

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்

 

கோவை, மார்ச் 21: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டுப்போட சொந்த ஊர் செல்வார்களா? என சந்தேகம் நிலவுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி (சில பகுதிகள்), ஈரோடு பாராளுமன்ற ெதாகுதி இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் விசைத்தறி, பனியன் நிறுவனங்கள், ஆட்டோ மொபைல்ஸ், சாயப்பட்டறை, பவுண்டரி, மில், கிரசர், பம்பு, வெட்கிரைண்டர் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. வெளி மாவட்டம், வெளிமாநிலங்களை சேர்ந்த ெதாழிலாளர்கள் ேகாவையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

குறிப்பாக திருநெல்வேலி, மதுைர, விருதுநகர், நாகர்கோயில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்களும், பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அதிகளவு வசிக்கின்றனர். சுமார் 3 லட்சம் வாக்காளர்கள், கோவை மண்டலத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் சொந்த ஊர் சென்று ஓட்டு போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டுப்பதிவு நாளான்று பொது விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெளியூர் வாக்காளர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்களா? என சந்தேகம் நிலவுகிறது. அரசூர், கணியூர், நீலம்பூர், கருமத்தம்பட்டி, சோமனூர், அனுப்பர்பாளையம், பல்லடம், சூலூர் வட்டாரங்களில் தேர்தலை முன்னிட்டு கடந்த காலங்களில் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளது. குறிப்பாக பனியன், விசைத்தறி நிறுவனங்கள் தேர்தல் நாளில் முழுமையாக அடைக்கப்படும் என தெரிவித்து ஓட்டுப்போட வாய்ப்பு வழங்கினர். வரும் பாராளுமன்ற தேர்தலில் வெளியூர் வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல போதுமான வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘வெளியூர் தொழிலாளர்கள் கோவையில் முகவரி மாற்றம் செய்திருந்தால் இங்ேக ஓட்டுப்போடலாம். எவ்வளவு பேர் வெளியூர் வாக்காளர்கள் என சரியாக தெரியவில்லை. யாராக இருந்தாலும் ஓட்டுப்போட செல்லவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. ஓட்டுரிமை உள்ளவர்கள் வெளியூர் செல்ல தயக்கம் காட்டக்கூடாது. ஓட்டுப்பதிவு நாளில் வெளியூர் தொழிலாளர்கள் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தங்கி விட்டால் ஓட்டு சதவீதம் வெகுவாக குறைந்து விடும். தொழில் நிறுவனங்களிலேயே தங்கி வேலை செய்யும் ெதாழிலாளர்கள் வெளியூர் செல்வார்களா?, தொழில் நிறுவனத்தினர் என்ன ஏற்பாடு செய்வார்கள் என உறுதி செய்ய வட்டார தேர்தல் அலுவலர்களுக்கு (பி.எல்.ஓ) உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

 

The post கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tirupur ,Erode ,Erode district ,Pollachi ,Nilgiris ,Coimbatore, Tirupur, Erode district ,
× RELATED வெள்ளியங்கிரி மலையில்...