×

நாகர்கோவிலில் திக கொடியேற்று விழா

நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கொடியேற்று விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத்தில் வைத்து எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக குமரிமாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தோவாளை ஒன்றிய செயலாளர் தமிழ் அரசன், திராவிடர் கழக லட்சிய கொடியினை ஏற்றி வைத்தார். திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சிவதாணு, திராவிடர் கழக காப்பாளர் பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், திராவிடர்கழக மாவட்டத் துணைத் தலைவர் நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன், மாநகர திராவிடர் கழக தலைவர் கருணாநிதி, பாண்டியன், திராவிடர் கழக கோட்டாறு பகுதி தலைவர் மணிமேகலை, திராவிடர் கழக தோவாளை ஒன்றிய தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post நாகர்கோவிலில் திக கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Tags : Flag ,Nagercoil ,Kanyakumari District ,Dravidar Kazhagam ,Dravidar Kazhagam Flag Hoisting Ceremony ,Dravida Kazhagam ,Oglukinassery ,Periyar Maiyam ,Flag Hoisting Ceremony ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி