×

ரூ.61 லட்சம் பறிமுதல் பாஜ கொடியுடன் வந்த கார் சிக்கியது

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும், தேர்தல் நடத்ைத விதிகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் – புதுச்சேரி எல்லையில் கெங்கராம்பாளையம் பகுதியில் பறக்கும்படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆணங்கள் இன்றி புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை திருச்சியில் ரூ.3.63 லட்சம், லால்குடி அருகே ரூ.57,500, தஞ்சாவூர் அடுத்த ஒரத்தநாட்டில் ரூ.5.88 லட்சம், நெய்வாசல் அருகே ரூ.59.750ம், கும்பகோணத்தில் ரூ.81,200 பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சேஷன் சாவடி அருகே உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ.11.58 லட்சம், வேலூர் மாவட்டம் பொன்னை அருகே கே.என்.பாளையத்தில் உள்ள மாநில எல்லை சோதனைசாவடியில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காஞ்சிபுரம் நோக்கி பாஜ கொடியுடன் சென்ற சொகுசு காரை மடக்கி சோதனை செய்ததில் காரில் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

The post ரூ.61 லட்சம் பறிமுதல் பாஜ கொடியுடன் வந்த கார் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Baja ,CHENNAI ,Kengarambpalayam ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...