×

தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான பணிகளில் காவல் துறை இருக்க வேண்டும்: அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 28ஏ யின் கீழ் காவல்துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர், அனைத்து கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை காவலர்கள், ஊர்காவல் படை உட்பட அனைத்து நிலை காவலர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள எல்லா காவல்துறை அதிகாரிகளும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் பணிகளை அனைத்து வகையிலும் செய்ய தமிழ்நாடு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மேற்கூறிய அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணைய பிரதிநிதிகளாகக் கருதப்படுவார்கள், இது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியுடன் முடியும். இந்த அலுவலர்கள், தேர்தல் காலகட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

The post தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான பணிகளில் காவல் துறை இருக்க வேண்டும்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Police Department ,Chennai ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...