×

பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்: திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் சென்னை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி அறிவிப்புகளை கூறியுள்ளார்.
அதன் விவரம்:

சென்னை
* பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் உருவாக்கப்படும்.
* பல ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ள வேளச்சேரிக்கும் புனித தோமையார்மலை ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள ரயில்வே பணி விரைந்து முடிக்கப்படும்.
* வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கமாக செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைக்கப்படும்.
* கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்.
* விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.
* திருவொற்றியூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான திருவொற்றியூர் விம்கோநகர் ரயில் நிலையத்தை ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தி, வடக்கில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் விம்கோநகரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
* மணலி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலை மாசுகளால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு இப்பகுதி பொதுமக்கள் ஆளாக்கப்படுகின்றனர். இந்த பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கு ஆவன செய்யப்படும்.

திருவள்ளூர்
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள புள்ளையன் ஊராட்சி, செங்குன்றம் பேரூராட்சியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அங்கு சாலையை கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
* பழவேற்காடு முதல் கடம்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்து புதிய சாலை அமைக்கப்படும்.

காஞ்சிபுரம்
* பூந்தமல்லி நெடுஞ்சாலை – தா.பி.சத்திரம் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கப்படும்.
* ஸ்ரீ பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலைகளாக மாற்றும் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்.
* அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு காஞ்சிபுரம் வழி செல்லும் ரயில் பாதை இருவழி பாதையாக மாற்றப்படும்.
* காஞ்சிபுரம் கிழக்கு ரயில்வே நிலையத்தில் செயல்படும் பலதரப்பட்ட சரக்கு போக்குவரத்தும், ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சரக்கு முனையமாக செயல்படும் போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம், சுற்று வட்டார பகுதி மக்களின் நலனை கருதி, கூடுதல் மின்சார ரயில் சேவை வழங்க வலியுறுத்தப்படும்.

செங்கல்பட்டு
* செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி, உற்பத்தியை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் மூன்றாவது ரயில் முனையம்: திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DMK ,M.K.Stal ,Chief Minister ,M. K. Stalin ,President ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...