×

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் ஆமைகள் கடத்தல்: இந்தியர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

சிங்கப்பூர்: வடஅமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட சிவப்பு காதுகள் உடைய ஸ்லைடர்கள் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது சிங்கப்பூரில் நீரில் வாழும் ஆமையினங்களை குறிக்கும் ர்ராபின் என்ற பொதுவான வார்த்தையால் அழைக்கப்படுகின்றன. இந்த அரிய வகை காட்டு ஆமைகள் சிங்கப்பூர் தேசிய வனஉயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆமைகள் செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இந்தியாவை சேர்ந்த ரபீக் சையத் ஹரிசா அலி ஹூசைன்(40) தன் சூட்கேஸ்களில் 5,000க்கும் மேற்பட்ட ர்ராபின் ரக ஆமைகளை கடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், அலி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் ஆமைகள் கடத்தல்: இந்தியர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Tamil Nadu ,North America ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து வந்து...