×

இன்று மாலை 5 மணிக்குள் அரசியல் விளம்பரங்களை அகற்ற தேர்தல் கமிஷன் கெடு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் பல மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள் அகற்றப்படாதது குறித்து தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அமைச்சரவை செயலர் மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், ‘ மக்களவை தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மார்ச் 16ம் தேதி முதல் தனியார் மற்றும் அரசு இடங்களில் அமைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்ற உத்தரவிட்ட போதிலும், இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன.

எனவே அங்கீகரிக்கப்படாத அனைத்து அரசியல் விளம்பரங்கள், சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள், பேனர்கள், கட்அவுட்கள், ஹோர்டிங்குகள், கொடிகள் போன்றவை பொது இடங்களில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், மின்,தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடம் ஆகியவற்றில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும். இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் கமிஷனில் சமர்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

The post இன்று மாலை 5 மணிக்குள் அரசியல் விளம்பரங்களை அகற்ற தேர்தல் கமிஷன் கெடு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Congress ,Lok Sabha ,Union ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை