×
Saravana Stores

நடத்தை விதிகளை மீறிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதி பாஜ வேட்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கராந்லஜே போட்டியிடுகிறார். இவர் பெங்களூருவில் பாஜ சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசினார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து தமிழர்கள் குறித்து தான் பேசியதற்கு ஷோபா கராந்லஜே மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையில், தமிழர்களை இழிவுபடுத்தி பேசியது மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளை ஒன்றிய அமைச்சர் மீறியுள்ளார் என்று திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். இப்புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. ஷோபா கராந்தலஜே மீது எடுத்த நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

The post நடத்தை விதிகளை மீறிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Shobha Karanthalaje ,Election Commission ,Karnataka ,Chief Electoral Officer ,Bengaluru ,Election Commission of India ,Shoba Karanthalaje ,Union Minister of State ,BJP ,Bengaluru North Constituency ,Union Minister Shoba Karanthalaje ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர்...