×

சில்லி பாயின்ட்…

*  லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ள இங்கிலாந்து வேகம் டேவிட் வில்லி, தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் களமிறங்க மாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் உறுதி செய்துள்ளார்.

*  மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்திய நட்சத்திரம் சுமித் நாகல் 6-3, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் கோல்மேன் வோங்கிடம் (19 வயது) தோற்று பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தார்.

*  இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கோல்கீப்பிங் பயிற்சியாளராக ஹாலந்தின் டெனிஸ் வான் டி போல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் வான் டி போல் முக்கிய பங்காற்றுவார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : England ,David Willey ,Lucknow Supergiants ,Justin Langer ,Miami Open ,Dinakaran ,
× RELATED ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ