×

ஆர்சிபி அணியின் பச்சை ஜெர்சி அறிமுகம்

சென்னை: ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் களமிறங்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய பச்சை சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் சென்னையில் நாளை தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், 2024 தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய ஜெர்சி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் ஆர்சிபி அணி வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். சுற்றுச்சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பச்சை நிற ஜெர்சி அணியப்படுகிறது. சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று ஆர்சிபி அணியின் பச்சை நிற ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேப்டன் டு பிளெஸ்சி, நட்சத்திர வீரர்கள் விராத் கோஹ்லி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ரஜத் பத்திதார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், ஆர்சிபி அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. ஆர்சிபி அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஆனாலும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இம்முறை பெயர் மாற்றம் மற்றும் ஜெர்சி மாற்றம் அதிர்ஷ்டத்தை தருமா என்ற எதிர்பார்ப்பில் ஆர்சிபி ரசிகர்கள் உள்ளனர்.

The post ஆர்சிபி அணியின் பச்சை ஜெர்சி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : RCB ,Chennai ,Royal Challengers Bangalore ,IPL ,2024 IPL series ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...