×
Saravana Stores

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

திருச்சி: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

(20-ந்தேதி) தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார்.
21-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.
22-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருகிறார்.
23-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார்.
25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பங்குனி தேரோட்டம் வரும் 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில்5 இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு(தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா: தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Panguni Chosen Festival ,Srirangam Renganathar Temple ,Nomerumal Road ,Tiruchi ,Panguni Choreceremony ,indeti ,Puloka Vaikundam ,SITHRA ,Srirangam Renganathar Temple Panguni Chosen Festival ,Numerumal Road ,
× RELATED ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்...