×
Saravana Stores

தமாகாவை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி

சென்னை : ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. ஓபிஎஸ் கேட்ட தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்படுவதால் இழுபறி நீடிக்கிறது. த.மா.கா.வுக்கு மயிலாடுதுறை, தஞ்சையை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால் த.மா.கா.வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

பாஜக தலைமையிலான கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்கான பேச்சு வார்த்தை மற்றும் கையெழுத்து ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுடனும் பாஜக தலைமை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஒப்பந்த கையெழுத்தில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று காலை புதிய நீதிக்கட்சியுடன் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து மதியம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அழைத்து அவர்களுக்கு 2 தொகுதி ஒதுக்கப்படும் என கூட்டணி கையெழுத்தாகியிருந்தது. அதனை தொடர்ந்து ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி என்ற வீதம் தமமுகவிற்கு அந்த தொகுத்து ஒதுக்கப்படுவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு முன்னதாக தமாகாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி இறுதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஆனால் அவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்று தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை காரணமாக இழுபறி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதியம் ஓ.பன்னீர்செல்வம் கமலாலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் சுமார் 2 மணிநேரம் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் உடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகாமால் இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post தமாகாவை தொடர்ந்து ஓபிஎஸ் அணியுடனும் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி appeared first on Dinakaran.

Tags : Tamaka ,BJP ,OPS ,Chennai ,VASAN ,Teni ,Amuga ,Vukku Mayiladudura ,Dinakaran ,
× RELATED 2026ல் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு...