×

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி அதானி துறைமுக எல்லைக்குள் கடந்த 29ம் தேதி ஒரு விசைப்படகு அத்துமீறி நுழைந்திருப்பதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் விசைப்படகில் சுற்றித்திரிந்த 4 பேரையும் பிடித்து மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், இலங்கை, மட்டகளப்பு பகுதியை சேர்ந்த முகமது ரிஸ்கான் (21), முகமது காசிம் (50), முகமது ஆய்தர் (42), முகமது ரியால் (19) என்பது தெரியவந்தது. எந்த ஆவணமும் இன்றி, இந்திய கடல் எல்லை பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுக இடங்களில் அத்துமீறி சுற்றித்திரிந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் 4 பேரையும் மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர். …

The post காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattupally port ,Chennai ,Kattupally Adani port ,Meenjur, Tiruvallur district ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?